நெஞ்சுவலி காரணமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரோஜா படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏர்.ஆர்.ரஹ்மான். தனது இசையால் ரசிகர்கள் மனதை வென்ற அவர், 2 ஆஸ்கர் விருதுகள், கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது, தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், 58 வயதான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காலை 7.30 மணிக்கு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதயத்திற்கு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனை நீக்க ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நிலை சீராகி மீண்டு வர வேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து பதிவிட்டு வருகின்றன்றனர்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் உடல்நிலை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அப்பல்லோ மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஏ.ஆர்.ரஹ்மான் நலமாக உள்ளார் எனவும் அவர் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.