தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கன்னட நடிகையான ரன்யா ராவ் கடந்த 3-ம் தேதி துபாயில் இருந்து 14 கிலோ 800 கிராம் தங்கம் கடத்தி வந்த வழக்கில், டெல்லி வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமின் கோரி அவர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணை நடந்து கொண்டிருப்பதால் ஜாமீன் வழங்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்தார்.