சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
ரோஜா படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏர்.ஆர்.ரஹ்மான். தனது இசையால் ரசிகர்கள் மனதை வென்ற அவர், 2 ஆஸ்கர் விருதுகள், கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது, தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக காலை 7.30 மணிக்கு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில் பூரண குணமடைந்த அவர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது மகன் அமீன் தகவல் அளித்துள்ளார்.
இது குறித்து அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இன்று காலை நீரிழப்பு அறிகுறிகள் உடன் ஏ. ஆர். ரஹ்மான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வழக்கமான பரிசோதனைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.