சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோவின் சுறுசுறுப்பான செயல்பாடுகள் வியப்பை ஏற்படுத்தியுள்ளன.
பெய்ஜிங்கின் எம்போடிட் AI ரோபோடிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மின்சார மனித வடிவ ரோபோவான டியாங்காங், தொடர்ச்சியாக பல்வேறு சுறுசுறுப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
அண்மையில் டியாங்காங் ரோபோவின் வீடியோ ஒன்றை வெளியிட்ட அந்நிறுவனம், அதன் மேம்பட்ட இயக்கத்திற்காக குறுகியகால நினைவுகளை இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.