பாகிஸ்தானில் சக்கரங்களின்றி விமானம் தரையிறங்கிய சம்பவத்தால் பதற்றமான சூழல் நிலவியது.
கராச்சியில் இருந்து புறப்பட்டு வந்த பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு விமானம், லேண்டிங் கியரின் பின்புற சக்கரங்களில் ஒன்று இல்லாமல் ஆபத்தான சூழலில் லாகூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இருப்பினும் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதால், அதிலிருந்த நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிர் தப்பினர். சக்கரம் காணாமல் போனது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.