அமெரிக்காவின் ஓக்லஹோமா நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
சூறைக்காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாக ஓக்லஹோமா நகரில் உள்ள வீடுகள் தீப்பற்றி எரிந்தன. இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்களை மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக வெளியேற்றினர். மேலும், காட்டுத்தீயில் யாரேனும் சிக்கியுள்ளனரா என தேடி வருகின்றனர்.