திமுக செய்த ஊழலை வைத்து புத்தகமே எழுதலாம் என்று விஜய் கூறியது சரிதான் என்றும், புத்தகம் மட்டும் அல்ல திரைப்படமே எடுக்கலாம் எனவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
சாலிகிராமத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனின் துணை ஆலயமான சித்தர் பீடத்தில் திருகுடமுழக்கு நன்னீராட்டு இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பக்தர்களோடு பக்தர்களாக கலந்து கொண்டு ஆதிபராசக்தி அம்மனை தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர்,
ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. பெண்களை கருவறைக்குள் அனுப்பி பெரும் புரட்சியை செய்தவர் அம்மா. அதனால்தான் அம்மாவுக்கு பிரதமர் பத்மஸ்ரீ விருதை கொடுத்து கௌரவித்துள்ளார். தமிழக அரசின் பட்ஜெட்டை விமர்சிப்பவர்கள் காமாலை கண்கள் உடையவர்கள் என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்தது குறித்து பேசிய தமிழிசை, எந்த காமாலை கண்ணோடு மத்திய பட்ஜெட்டை விமர்சித்தார்கள் என நான் கேள்வி எழுப்ப முடியுமா.
ரூ போட்ட பட்ஜெட்க்கெல்லாம் ஓ போட்டு வியப்பில் வாழ்த்த முடியாது. நாளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.
திமுகவின் ஊழலை வைத்து புத்தகமே எழுதலாம் என விஜய் கூறியது சரிதான், நிச்சயமாக புத்தகமல்ல திமுகவின் ஊழலை வைத்து திரைப்படமே எடுக்கலாம் என தெரிவித்தார்.