TRB தேர்வு வாரியத்தின் விடைத்தாள் பிழையால் ஏழை மாணவர்களின் கனவு பறிபோவதாக தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு தகுதி தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. மார்ச் 6 முதல் 9-ம் தேதி வரை நடைபெற்ற TET தேர்வில், 50-க்கும் மேற்பட்ட வினாக்களின் விடைகள் தவறாக கொடுக்கப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், தேர்வு எழுதிய விடைத்தாளையும், திருத்தப்பட்ட விடைத்தாள் குறிப்பையும் உடனடியாக இணையத்தில் வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள தேர்வர்கள், இதுபோன்ற தவறுகள் நடக்காத வண்ணம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.