டெல்லி மதுபான கொள்முதல் முறைகேட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதுபோல், தமிழகத்திலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கோவை காளப்பட்டியின் புதிய மண்டல தலைவராக பொறுப்பேற்றுள்ள உமாதேவி தங்கராஜின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதுடன், மும்மொழி கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்திலும் பங்கேற்றார்.
முன்னதாக பேட்டியளித்த அவர், தமிழகத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனை தொடர்பான முழுமையான அறிக்கை வெளியான பின், முறைகேடுகள் தொடர்பான மேலும் பல தகவல்கள் வெளிவரும் என கூறினார்.