ஊத்தங்கரை அருகே அரசு சத்துணவு முட்டைகள் தனியார் வாகனத்தில் வைத்து விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே தனியார் வாகனத்தில் அரசு சத்துணவு திட்டத்திற்காக விநியோகிக்கப்படும் முட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர், வாகன ஓட்டுநரிடம் நடத்திய விசாரணயில், அரசு பள்ளிகளில் விநியோகிக்கப்படுவதற்காக நாமக்கல்லில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட முட்டைகள் என்றும், முட்டைகள் தரமற்றவை எனக்காரணம் காட்டி பள்ளியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அரசு விரிவான விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொணர வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அரசு சத்துணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுப் பொருட்கள், உரியவர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவு கோரிக்கை விடுத்துள்ளனர்.