தென்காசி மாவட்டம் கடையம் அருகே இருதரப்பு மக்கள் மோதலில் ஈடுபட்டனர்.
மலையாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் வீட்டில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து அந்த தரப்பைச் சேர்ந்தவரின் உறவினர்கள் வேன் உள்ளிட்ட வாகனங்களில் மலையாங்குளம் வந்திருந்தனர்.
அப்போது அதை ஊரைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருடைய நிலத்தில் வாகனங்களை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் இரு தரப்பிற்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில், மதுபோதையில் கற்கள், கம்பால் தாக்கி மோதலில் ஈடுபட்டனர். இதனையறிந்து அங்குச் சென்ற காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.