கன்னியாகுமரி மாவட்டம், பள்ளியாடியில் உள்ள பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் சமபந்தி விருந்து நடைபெற உள்ளது.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இத்தலத்தில் மும்மதத்தினரும் வழிபாடு நடத்துவது வழக்கம், இத்தலத்தில் ஆண்டு தோறும் நடத்தப்படும் சமபந்தி விருந்து இந்தாண்டும் நடத்தப்படுகிறது, அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றன.
முன்னதாக அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. பின்னர் கோயிலுக்குக் காணிக்கையாக வழங்கப்படும் பொருட்களைக் கொண்டு சமபந்தி விருந்து நடத்தப்படுகிறது.
இந்த பிரம்மாண்ட விருந்தை தயாரிக்கும் பணியில் பொதுமக்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரார்த்தனையின் முடிவில் ஏழை மக்களுக்காகத் தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் திருத்தலம் சார்பில் வழங்கப்பட்டது.