சென்னை எம்ஆர்சி நகர் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்பிலக்கியம் பன்னாட்டு கருத்தரங்கம் “வைரமுத்தியம்” என்ற பெயரில் நடைபெற்றது.
இதில் இந்திய அளவிலும், உலக அளவிலும் புகழ்மிக்க அறிஞர்கள் கட்டுரைகளை வழங்கினர். இந்த நிகழ்வை உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் தொடங்கி வைத்தார். நிறைவு நிகழ்வில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று வைரமுத்தியம் நூலை வெளியிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து, சித்தாந்தம் வேறு, அரசியல் வேறு என்றும், சித்தாந்தம் என்பது மாறாதது, அரசியல் என்பது மாறுவது எனக் கூறினார்.