அமெரிக்க நாட்டின் மிசோரி, மிசிசிபி, அலபாமா உள்ளிட்ட மாகாணங்களைச் சூறாவளி தாக்கியது.
பலத்த காற்றுடன் சூறாவளி வீசியதால் மரங்கள் வேரோடு சரிந்தன. வீடுகள், வணிக வளாகங்கள் உள்பட பல்வேறு கட்டிடங்களின் மேற்கூரை சூறாவளியில் தூக்கி வீசப்பட்டது.
சூறாவளியில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
டெக்சாஸ், ஒக்லஹோமா, அர்கான்சாஸ், மிசவுரி, இல்லினாய்ஸ், இன்டியானா மற்றும் மிச்சிகன் மாகாணங்களில் பலத்த காற்றால் மின்சார துண்டிப்பு ஏற்பட்டு 2 லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டன.