தென் கிழக்கு ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவின் கோசானி நகரில், பல்ஸ் என்ற இரவு நேரக் கேளிக்கை விடுதியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
பிரபல ஹிப் ஹாப் இசைக்குழுவான டி.என்.கே., குழுவினரின் நிகழ்ச்சி நடந்தது. அதைக் காண கேளிக்கை விடுதியில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் கூடினர்.
உற்சாகப்படுத்தும் வகையில் பைரோடெக்னிக்ஸ் எனப்படும் நீண்ட நேரம் எரியும் மத்தாப்புகள் கொளுத்தப்பட்டன. அதிலிருந்து விழுந்த தீப்பொறிகளால் அரங்கத்தில் தீ பிடித்தது. இதனால் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.