டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை காவல்துறையினர் கைது செய்தனர்.
டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது அமலாக்கத்துறை சோதனை மூலம் தெரியவந்தது. இதை கண்டித்து டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட பாஜகவினர் முடிவு செய்தனர்.
அந்த வகையில் சென்னை எழும்பூரிலிருந்து பேரணியாகச் செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து அவரை பேருந்தில் ஏற்ற முயன்றபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், தேசிய கட்சியின் மூத்த தலைவரான தம்மை நாய் வண்டியில் ஏற்றுவதாகவும் ஆதங்கம் தெரிவித்தார்.