சேலத்தில் உரிய விலை கிடைக்காததால் 1 டன் சாமந்திப் பூக்களை குப்பையில் வீசும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.
ஒரு வாரமாகச் சுப நிகழ்ச்சிகள் இல்லாததால், சாமந்திப் பூக்களை விவசாயிகள் கொண்டு வந்த நிலையில், ஒரு கிலோவை 10 ரூபாய்க்கு மொத்த வியாபாரிகள் கேட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், ‘பறிக்கும் கூலி, வண்டி வாடகை எனக் கிலோவுக்கு, 30 ரூபாய்க்கு மேல் செலவு செய்த நிலையில், 10 ரூபாயை வைத்து என்ன செய்வது’ என விரக்தியில் 1 டன் அளவிலான சாமந்திப் பூக்களை குப்பையில் வேதனையுடன் கொட்டிச்சென்றனர்.