தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில், “பாரதியும் பெண்மையும்” என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் உற்சாகமாக நடனமாடினர்.
பள்ளி மாணவிகள் 208 பேர் வெள்ளை, கருப்பு நிற ஆடை அணிந்து பாரதியாரின் பாடல்களுக்கு நடனமாடி அசத்தினர். அவர்களுக்குப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராகக் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திலகா கலந்துகொண்டு மாணவிகளைப் பாராட்டினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பனையடிபட்டி ஈசாகேந்திரா கலாச்சார அகாடமி செய்திருந்தது.