திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால், இரண்டு ஏக்கரில் பயிரிடப்பட்ட தக்காளிச் செடிகளை விவசாயி அழித்தார்.
பல்லடத்தை அடுத்த அல்லாளபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் இரண்டு ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டார். திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைக்குத் தக்காளியைக் கொண்டு சென்றபோது 15 கிலோ பெட்டி வெறும் 100 ரூபாய்க்கு விற்பனையானதால், செந்தில்குமார் மனமுடைந்தார்.
இதனால் டிராக்டர் மூலம் உழவு ஓட்டி 2 ஏக்கரில் விளைந்திருந்த தக்காளிச் செடிகளை அழித்தார். தக்காளி விலை வீழ்ச்சி ஏற்படும்போது குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்து தங்களைப் பாதுகாக்க வேண்டும் என மாநில அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.