ஹிஜாப் அணியாத பெண்களை ட்ரோன்கள் மற்றும் AI தொழில்நுட்பம் மூலம் ஈரான் அரசு கண்காணித்து வருவதாக ஐநா அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அந்நாட்டின் பெண்கள், சிறுமிகள் ஹிஜாப் அணிந்திருப்பதை உறுதி செய்ய ட்ரோன்கள் மற்றும் FACE RECOGNITION போன்ற மேம்பட்ட கண்காணிப்பு தொழில்நுட்பத்தை ஈரான் பயன்படுத்துவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக நாசர் மொபைல் சிஸ்டம் பயன்படுத்தப்படுவதாகவும், இது ஹிஜாப் சட்டங்களை மீறும் பெண்களைப் பற்றிப் புகாரளிக்க காவல்துறை மற்றும் பொதுமக்களுக்கு இது உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இஸ்லாமியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 286-ன் கீழ், இந்த குற்றச்சாட்டிற்கு உள்ளாகும் பெண்கள் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.