பஞ்பாப் மாநிலம், அமிர்தசரஸ் கோயிலில் வெடிகுண்டு வீசிய நபர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கண்ட்வாலா பகுதியில் உள்ள தாகூர் துவாரா கோயிலுக்கு வெளியே இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள், கோயில் மீது வெடிகுண்டுகளை வீசினர். இதில் கோயிலின் மதில் சுவர் சேதமடைந்ததுடன் ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கின.
இந்த சம்பவத்தில் ஐ.எஸ்.ஐ அமைப்புக்குத் தொடர்புள்ளதா என்ற கோணத்தில், காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், வெடிகுண்டு வீச்சில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க முயன்றபோது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். தப்பியோடிய மற்றொருவரை காவல்துறை தேடி வருகின்றனர்.