சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட இரு விண்வெளி வீரர்கள் நாளை பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ளது.
நேற்று அதிகாலை சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக இணைந்த ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உள்ளிட்ட அமெரிக்க விண்வெளி வீரர்கள் மற்றுமொரு ரஷ்ய விண்வெளி வீரர் ஆகியோர் பூமிக்கு திரும்பவுள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் நாளை உள்ளூர் நேரப்படி மாலை 5.57 மணிக்கு ஃபுளோரிடா கடற்பகுதி அருகே தரையிறங்க உள்ளதாக நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.