மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை போலீசார் கைது செய்தனர்.
அலங்காநல்லூர் அடுத்த கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் பங்கேற்ற கச்சிராயிருப்பு பகுதியை சேர்ந்த மகேஷ் பாண்டி என்ற மாடுபிடி வீரர் காளை முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காவல்துறை வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியதால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.