குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரை மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் சந்தித்தனர்.
குடியரசு துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கருக்கு சில நாட்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு பின் இல்லம் திரும்பினார்.
இந்நிலையில் அவரை மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், கிரன் ரிஜிஜு, அர்ஜுன்ராம்மேக்வால் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.