போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 15 மாதங்களுக்கும் மேலாகப் போர் நீடித்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் போர் நிறுத்தப்பட்டுப் போர் நிறுத்த ஒப்பந்தப்படி பணய கைதிகள் விடுவிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கிடையே படுகாயமடைந்த குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடும் தந்தையின் காட்சி வெளியாகிக் காண்போரைக் கண்கலங்கச் செய்துள்ளது.