கன்னியாகுமரி மாவட்டம் மாமூட்டுக்கடை பகுதியில் உள்ள அய்யா வைகுண்டர் பதியில் ஏடுவாசிப்பு திருவிழாவையொட்டி இந்திர வாகனத்தில் அய்யா வைகுண்டர் வீதியுலா சென்றார்.
அய்யா வைகுண்டர் பதியில் வைகுண்ட அவதார தினம் மற்றும் 75-ம் ஆண்டு திரு ஏடுவாசிப்பு திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான இந்திர வாகனத்தில் அய்யா வைகுண்டர் பவனிவருதல் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட இந்திர வாகனத்தைச் சிங்காரி மேளம், செண்டை மேளம் முழங்கப் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.