பூமி திரும்பும் பயணத்தை சுனிதா வில்லியம்ஸ் தொடங்கியுள்ள நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ட்ராகன் விண்கலம் பிரிந்தது.
9 மாதங்களைச் சர்வதேச விண்வெளி மையத்தில் கழித்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினர் பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
இதையொட்டி குழுவினர் அனைவரும் புகைப்படம் எடுத்ததுடன் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து அன்பை பரிமாறிக் கொண்டனர்.
இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸை மீட்க அனுப்பப்பட்ட ட்ராகன் விண்கலம், குழுவினருடன் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்தது.
இந்திய நேரப்படி நாளை காலை 3.27 மணியளவில் சுனிதா வில்லியம்ஸ் பூமியில் தரையிறங்க உள்ளார். விண்கலம் இறங்குவதை நேரலையில் ஒளிபரப்பச் செய்ய நாசா ஏற்பாடு செய்துள்ளது.