கரூர் அருகே ரவுடி கொலை வழக்கில் அவரது நண்பர்கள் இருவரை காவல்துறை கைது செய்தனர்.
வடக்கு பாளையம் பகுதியில் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரவுடி சந்தோஷ்குமார் உள்பட 10க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது மதுபோதையில் இருந்த அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் சந்தோஷ்குமார் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட பிரகாஷ், சந்தோஷ் ஆகிய இருவரை காவல்துறை கைது செய்தனர்