மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்குப் பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
முருகனின் அறுபடை வீடுகளில், முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் திருவாச்சி மண்டபத்தில் விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானுக்கு நவரத்தினங்களுடன் கூடிய கிரீடம் அணிவிக்கப்பட்டு செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.