சபரிமலை ஐயப்பன் கோயிலில் சௌமியா அன்புமணி கண்ணீர் மல்க சுவாமி தரிசனம் செய்தார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள ஐயப்பன் கோயிலில் இருந்து இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை சென்ற சௌமியா அன்புமணி, 18ஆம் படியேறி சுவாமி ஐயப்பனைக் கண்ணீர் மல்க தரிசனம் செய்தார். பின்னர், கோயில் வளாகத்தில் உள்ள சுவாமிகளை வழிபட்டார்.
சபரிமலையில் 18ஆம் படியேறி சுவாமி ஐயப்பன் தரிசனம் செய்ய வேண்டும் என்பது தன்னுடைய சிறு வயது கனவு என்றும், 50 ஆண்டுக்கால வேண்டுதல் நிறைவேறியது எனவும் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.