இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் வரிசையில் நின்றுகொண்டிருந்த வடமாநில பக்தர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இராமநாதசுவாமி கோயிலில் நடைபெறும் ஸ்படிகலிங்க பூஜையில் கலந்து கொள்வதற்காக ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜ் தாஸ் என்பவர் வந்திருந்தார்.
59 வயதான ராஜ்தாஸ் வரிசையில் நின்று கொண்டிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மயங்கிய ராஜ் தாசை கோயில் பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக திருச்செந்தூர் கோயிலிலும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பக்தர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.