ரயில்வே வேலைக்காக நிலத்தை லஞ்சமாகப் பெற்ற ஊழல் வழக்கில், பீகார் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிர ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி விசாரணைக்கு ஆஜரானார்.
முன்னதாக லாலு பிரசாத், ராப்ரி தேவி, அவர்களது மகள் மிசா பாரதி, மகன் தேஜ் பிரதாப் யாதவ் உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
அந்த வகையில், ராப்ரி தேவி தனது மூத்த மகள் மிசா பாரதியுடன் பாட்னா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். லாலு பிரசாத் நாளை ஆஜராவார் எனக் கூறப்படுகிறது.