கோவையில் உள்ள YWCA பள்ளியை மூட எதிர்ப்பு தெரிவித்துப் பெற்றோரும், மாணவர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை வஉசி மைதானம் எதிரே YWCA என்ற அறக்கட்டளையின் சார்பில் மெட்ரிகுலேசன் பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் 170 மாணவர்கள் பயின்று வந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காகப் பள்ளியை மூட நிர்வாகம் முடிவு செய்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோரும், மாணவர்களும் பள்ளியின் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.