திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
பல்லடம் அருகேயுள்ள சேமலை கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் அரங்கேறி 110 நாட்கள் கடந்தும் கொலையாளிகளைப் பிடிக்க முடியாமல் தனிப்படை காவல்துறை திணறி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படாத நிலையில், தற்போது வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.