இந்தியாவிலிருந்து ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு மெட்ரோ ரயில் பெட்டிகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் ரயில்வே மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து பேசிய அவர்,
ஐரோப்பா, ஆஸ்திரேலியா, சவூதி அரேபியாவுக்கு ரயில் பெட்டிகளை நாம் ஏற்றுமதி செய்வதாகவும், பீகார் மாநிலம் மார்ஹெளராவில் தயாரான ரயில் பெட்டிகள் ஏற்றுமதிக்குத் தயார்நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதுதவிர ரயிலில் பயன்படுத்தப்படும் முக்கியமான மின் உபயோக பொருட்கள் பிரான்ஸ், மெக்ஸிகோ, ருமேனியா, ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.