லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக பதவி வகித்த காலகட்டத்தை விட ரயில் விபத்து தற்போது 90 சதவீதம் குறைந்துவிட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் ரயில்வே துணை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவர், கடந்த 2005- 2006 காலகட்டத்தில் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராகப் பதவி வகித்தபோது 234 ரயில் விபத்து நடைபெற்றதாகக் கூறினார்.
அதிலும் ரயில் கவிழ்ந்ததைச் சேர்த்தால் எண்ணிக்கை 698-ஐ நெருங்கும் என கூறிய அஸ்வினி வைஷ்ணவ், தற்போது வெறும் 73 என்ற அளவில்தான் விபத்து பதிவாவதாக விளக்கமளித்தார்.