அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு சொந்தமான ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி இணைந்தார்.
தனது முதல் பதிவில், ட்ரூத் சோஷியல் மீடியாவில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், வரவிருக்கும் காலங்களில் இத்தளத்தில் ஆக்கபூர்வ உரையாடல்களில் ஈடுபட எதிர்பார்ப்புடன் உள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
தனது கலந்துரையாடல் வீடியோவை பகிர்ந்த டிரம்புக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட மற்றொரு பதிவில், தனது நண்பர் அதிபர் டிரம்ப்புக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.