உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரயிலும் கண்டெய்னர் லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.
அமேதி மாவட்டத்தில் அயோத்தி- ரேபரேலி ரயில்வே கிராஸிங் அருகே அதிகாலை 2.30 மணியளவில் சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது திறந்திருந்த ரயில்வே கேட் வழியாக கண்டெய்னர் லாரி கிராசிங்கை கடந்தபோது அதன் மீது ரயில் மோதியது.
இதில் காயமடைந்த லாரி ஓட்டுநர் சோனு சவுத்ரி மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக போலீசார் கூறினார்.