தென்கொரியாவில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் தலைநகரான சியோலில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும் சாலையில் பனி கொட்டியதால் வாகனங்கள் ஆங்காங்கே சறுக்கி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் முன்னெச்சரிக்கையாக வாகனம் ஓட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அதீத பனிப்பொழிவின் காரணமாகப் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரும் போது முக கவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.