முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர், மகள் ஆஷ்லே ஆகியோருக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவை பாதுகாப்பை ரத்து செய்வதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தகவல் வெளியிட்ட அவர், ஹண்டர் பைடனுக்கு நீண்ட காலமாக ரகசிய சேவை பாதுகாப்பு உள்ளதாகவும், இதற்கு அமெரிக்க வரி செலுத்துவோர் பணம் செலுத்துவதாகவும் கூறினார்.
மேலும், ஹண்டர் பைடனும், ஆஷ்லே பைடனும் இனி ரகசிய சேவை பாதுகாப்பைப் பெறமாட்டார்கள் என்றும் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.