அவசர கதியில் முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்திருப்பது திமுக அரசின் காழ்ப்புணர்ச்சியையே வெளிப்படுத்துகிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
முதல்வர் மருந்தகங்களில் போதிய மருந்து சப்ளை இல்லை என்று புகார் எழுந்துள்ள நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்துள்ள டிடிவி தினகரன்,
அம்மா மருந்தகங்களை முடக்கிவிட்டு காழ்ப்புணர்ச்சியின் காரணமாக முதல்வர் மருந்தகங்களை திமுக அரசு திறந்ததாக விமர்சித்துள்ளார்.
அவசர கதியில் திறக்கப்பட்ட முதல்வர் மருந்தகங்கள் தற்போது பயன்பாடற்ற நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ள டிடிவி தினகரன், காழ்ப்புணர்ச்சியில் திட்டங்கள் தொடங்குவதை நிறுத்திவிட்டு மக்கள் ஆதரவு பெற்ற திட்டங்களை தொடர்ந்து நடத்த முதலமைச்சர் முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.