கோவை வெள்ளியங்கிரி மலையில் சுழல் காற்று உருவான வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்குத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், வெள்ளியங்கிரி மலையின் உச்சியில் திடீரென சுழல் காற்று உருவானது.
இதனைச் சற்றும் எதிர்பாராத பக்தர்கள், சில நிமிடங்கள் மெய் மறந்து நின்று ரசித்தனர். இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.