ஓசூரில் உள்ள பழைய குப்பை சேகரிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தின்னூர் பகுதியில் பழைய குப்பை சேகரிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது. மறுசுழற்சிக்காக ஒரு டன்னிற்கும் அதிகமான துணிகள் இங்கு வைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் தீ பற்றியுள்ளது.
இதையடுத்து தீ மளமளவென பரவிய நிலையில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.