திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே லாரி ஓட்டுநரை தாக்கி ஒன்றரை லட்சம் ரூபாய் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
சேலத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் சுரேஷ், பல்லடம் அருகே டாரஸ் லாரியில் பயணித்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல், லாரி ஓட்டுநரை தாக்கிவிட்டு அவரிடமிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறித்துச்சென்றது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழிப்பறி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.