இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை கடைற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல், கரையோரங்களில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. போராட்டம் காரணமாக இரண்டு கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.