பட்டா மாறுதலுக்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வேப்பூர் கிராம நிர்வாக அலுவலராக கோபி என்பவர் பணியாற்றி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த நிஜாமுதீன் என்பவர் பட்டா மாறுதலுக்காக விஏஓ கோபியை அணுகியுள்ளார்.
அப்போது, பட்டா மாறுதலுக்காக 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்படி விஏஓ கோபியிடம் நிஜாமுதீன் பத்தாயிரம் ரூபாய் பணம் வழங்கினார்.அப்பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் விஏஓ கையும் களவுமாக பிடிப்பட்டார்.