‘புதுச்சேரி மாநில குடும்ப அட்டைதாரர்களுக்கு, வீடு-வீடாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கிய கூட்டத்தொடரில், கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நெல்லித்தோப்பு பாஜக சட்டமன்ற உறுப்பினர் விவிலியன் ரிச்சர்ஸ் ஜான்குமார், மாநில அரசு கொடுக்கும் இலவச அரிசியை பெரும்பாலான மக்கள் வாங்குவதில்லை என கூறினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி மாநில குடும்ப அட்டைதாரர்களுக்கு, வீடு-வீடாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என கூறினார்.