ஸ்ரீபெரும்புதூர் அருகே இருளர் சமூக மக்களுக்கு வழங்கக் கட்டப்பட்டு வரும் வீடுகள் தரமற்ற முறையில் உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சிக்குட்பட்ட எலுமியான் கோட்டூர் பகுதியில் 43 பழங்குடியின குடும்பங்களுக்கு மத்திய அரசின் நிதியில் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும் வீடுகள் தரமற்ற முறையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சிமெண்ட் கலவையே இல்லாத ஹாலோ பிளாக் கற்கள் வைத்து வீடுகள் கட்டப்படுவதாகவும், மாவட்ட நிர்வாகம் கட்டுமானத்துக்குத் தேவையான பணத்தை உடனடியாக வழங்கினால்தான் இருளர் சமூக மக்களின் சொந்த வீடு கனவு நிறைவேறும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.