திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான மாநாட்டில் நீதிபதிக்கு எதிராக பேசியதாக எம்பி சு.வெங்கடேசன் மீது பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை கே.கே.நகரில் கடந்த 9ஆம் தேதி மத நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட எம்பி சு.வெங்கடேசன், திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இது குறித்து மாட்டுதாவணி காவல் நிலையத்தில் பாஜக வழக்கறிஞர் அணியின் மாவட்ட துணைத் தலைவர் முருக கணேசன் புகார் அளித்துள்ளார். அதில், நீதித்துறை மீது அவநம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசிய எம்பி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.