வன பாதுகாப்பு, புலிகள் பாதுகாப்பு என அரசிடம் இருந்து பெறும் நிதியை வனத்துறை என்ன செய்கிறது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
நெல்லை பாபநாசத்தில் உள்ள அகஸ்தியர் அருவியில் உள்ளூர் மக்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிப்பதைத் தடை செய்ய உத்தரவிடக்கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நுழைவு கட்டணம் வசூலிப்பது தொடர்பான வனத்துறையின் அறிக்கை திருப்தியளிக்கவில்லை எனவும், விரைவில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் கூறி விசாரணையை ஒத்திவைத்தது.